பிரித்தானிய கோமகன் பயணித்த வாகனம் விபத்து!

பிரித்தானிய எடின்பர்க் கோமகன் பிலிப் (வயது-97) பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

எனினும், இவ்விபத்தில் கோமகன் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

கோமகன் பயணித்த வாகனம் நேற்று (வியாழக்கிழமை) குயின்ஸ் சான்ரிங்கம் பகுதியில்  வீதியைவிட்டு விலகி விபத்திற்குள்ளாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தையடுத்து வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. அதன்படி, நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தின் பின்னர் இந்நடவடிக்கையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற தற்போதைய அதிகபட்ச வேக வரம்பை, 50 கிலோமீற்றராக குறைப்பதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், வேகக் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் ஔிப்படக் கருவிகளும் வீதிகளில் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !