பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை!
பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் தற்போது தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேகன் கர்ப்பமாக இருந்தபோது பொதுமக்கள் அன்பு செலுத்தி ஆதரவு கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக இளவரசர் ஹரி கூறியுள்ளார்.
குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றும் இளவரசர் ஹரி மேலும் தெரிவித்துள்ளார்.