பிரித்தானியாவை நெருங்கும் Freya புயல்!

Freya என பெயரிடப்பட்டுள்ள புயல் 90 கிலோ மீற்றர் வேகத்தில் பிரித்தானியாவை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வானிலை அவதான நிலையத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை Freya சூறாவளியின் தாக்கம் அதிகளவில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் உணரப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Freya என பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் எச்சரிக்கையினைத் தொடர்ந்து Northern, Central and South West England மற்றும் Wales ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி Emma Smith, “ Freya புயல் காரணமாக விமானப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என்பன பாதிப்படைய கூடும்.

அத்துடன், வெள்ளத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்குரிய நடவடிக்களை பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டும். மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தெற்கு ஸ்கொட்லாந்திலுள்ள வாகனம் நெரிசல் அதிகளவில் காணப்படும் பகுதி, மலைப்பாங்கான பகுதி மற்றும் ஆற்றுப்பகுதிகளை அண்மித்த இடங்களில் நாளை திங்கட்கிழமை மிகவும் அபாயகரமான பனிப்பொழிவு நிலவக்கூடும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !