பிரித்தானியாவுடன் சிறந்த உறவை பேண ஜேர்மன் – டென்மார்க் விருப்பம்

பிரெக்சிற்றின் பின்னரும் பிரித்தானியாவுடன் சிறந்த உறவை பேண விரும்புவதாக ஜேர்மனும், டென்மார்க்கும் அறிவித்துள்ளன.

ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் மற்றும் டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக் ராஸ்முசென் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்லினில் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர்கள் இவ்வாறு பிரித்தானிய உறவு குறித்த தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜேர்மன் அதிபர், ”நாம் பிரெக்சிற்றை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது நடந்தேறினால் முறையான வெளியேற்றம் மற்றும் சிறந்த நட்புறவுனான எதிர்காலம் ஆகிய இரு விடயங்களை அடைய வேண்டும். அத்துடன், பிரித்தானியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த டென்மார்க் பிரதமர், ”ஜேர்மன் அதிபர் குறிப்பிட்டதை போன்று முடிந்தவரை அமைதியான வெளியேற்றத்தை நாமும் விரும்புகிறோம். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் நாம் பிரித்தானியாவுடன் முடிந்தளவு நெருக்கமாக செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !