பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்களை கட்டுப்படுத்துவதற்கே மக்கள் விரும்பினர் – பிரதமர் தெரேசா மே

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுஜன வாக்கெடுப்பின்போது, பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்களை கட்டுப்படுத்துவதற்கே மக்கள் விரும்பியதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்த குடியேற்றங்கள் பிரித்தானியாவுக்கு சிறந்தது என்பதை பல சந்தர்பங்களில் நான் தெரிவித்துள்ளேன். ஆனால் குடியேற்றங்கள் கட்டுப்படுத்தப்படுவதையே மக்கள் விரும்புகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விளைவாகவே மக்கள் அதனை பார்க்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள் மீது ஏற்கனவே கட்டுப்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. குடியேற்ற விவகாரத்தில் நிலையான நிகர ஒதுக்கீட்டை வைத்திருப்பது அரசாங்கத்திற்கு முக்கியம் என்பதை நாம் தொடர்ந்து நம்புகின்றோம். இதனையே பலரும் நம்புகின்றனர்”  என்று தெரிவித்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !