பிரித்தானியாவில் சிக்கியிருந்த 278 பயணிகள் நாடு திரும்பினர்
பிரித்தானியாவில் சிக்கியிருந்த மேலும் 278 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.504 இலக்க விசேட விமானத்தில் அதிகாலை 2.51 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விமானத்தில் வருகைத்தந்தவர்கள், விமான பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் உள்ள 4 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.