Main Menu

பிரித்தானியாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழப்பு!

பிரித்தானியா – சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது சஸெக்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரவ்லி டவுன் என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் இரண்டு பெண்களின் சடலங்களை கண்டெடுத்தனர்.

அத்துடன் படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு அம்பியூலன்ஸின் உதவியுடன் பிரைற்றனில் உள்ள ரோயல் சஸெக்ஸ் கவுண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...
0Shares