பிரித்தானியாவில் இராணுவச் சட்டம் அமுல் படுத்தப்படும் வாய்ப்பு

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் விளைவாக ஏற்படக்கூடிய கொந்தளிப்புகளை தவிர்ப்பதற்கு இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு தெரிவு பிரித்தானியாவிற்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அத்தெரிவில் மாத்திரம் அரசாங்கம் கவனம் செலுத்தாது என சுகாதார அமைச்சர் மட் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான சாத்தியம் நிலவுகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆனால், இராணுவ சட்டம் என்ற ஒரு விடயத்தில் மாத்திரம் அரசாங்கம் தங்கி நிற்காது எனத் தெரிவித்தார்.

ஆனால், சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் செயற்படும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !