பிரித்தனிய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் Rolf harris பிணையில் விடுதலை..

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட தொலைக்காட்சி ஒன்றின் பொழுதுபோக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரோல்ஃப் ஹரிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1971 மற்றும் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடையில் மூன்று பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரோல்ஃப் ஹரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரோல்ஃப் ஹரிஸ் சிறுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மிகப்பிரபலமான தொகுப்பாளராக இருந்த போது இளம் பெண்களை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !