Main Menu

பிரிட்டிஷ் பிரதமர் மே, சில நாள்களில் தனது பதவி விலகல் தேதியை அறிவிக்கக்கூடும்

பிரிட்டனின் பிரதமர் தெரேசா மே, அடுத்த சில நாள்களில் தமது பதவி விலகலுக்கான தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) அதனைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்படிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பதவி விலக திருமதி மே உறுதியளித்திருந்தார்.

ஆனால் அதற்கான தேதியை அறிவிக்கும்படி மன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.