‘பிரிட்டிஷ் குடிமக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை மதித்து நடந்தால்தான், கிருமிப் பரவலிலிருந்து மீள முடியும்- பிரதமர் ஜான்சன்’
பிரிட்டிஷ் குடிமக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை மதித்து நடந்தால்தான், நாடு கிருமிப் பரவலிலிருந்து மீள முடியும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் இதுவரை 3,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
140க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
லண்டனில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறிய திரு.ஜான்சன் , நகரம் முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை நிராகரித்தார்.
பிரிட்டனில் தற்போது நாள்தோறும் 5,000 பேருக்குக் கிருமித்தொற்றுச் சோதனை நடத்தப்படுகிறது.
மாத இறுதிக்குள் நாள்தோறும் 25,000 பேரிடம் சோதனை நடத்தத் திட்டமிடப்படுகிறது.
பிரிட்டனில், 50,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.