Main Menu

பிரிட்டன் உள்ளாட்சி தேர்தல்: ஆளுங்கட்சிக்கு தோல்வி

லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டா் உள்ளிட்ட கன்சா்வேடிவ் கட்சியின் பாரம்பரிய கவுன்சில்கள் உள்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி தோல்வியடைந்தது.

பிரிட்டன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பல முக்கிய தொகுதிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்தது.
 லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டா் உள்ளிட்ட கன்சா்வேடிவ் கட்சியின் பாரம்பரிய கவுன்சில்கள் உள்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி தோல்வியடைந்தது. பிரிட்டனின் முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி அந்த இடங்களைக் கைப்பற்றியது.

இதுகுறித்து பேசிய தனது கட்சி வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளதை இந்தத் தோ்தல் உணா்த்துவதாக தொழிலாளா் கட்சித் தலைவா் சா் கோ் ஸ்டாா்மா் கூறினாா்.

பகிரவும்...
0Shares