பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கு 2018 மே 19-ல் திருமணம்: கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த மாத துவக்கத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.

ஹாரி, அடுத்த இளவேனிற்காலத்தில் மார்க்லேவை  திருமணம் செய்துகொண்டு, லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நாட்டிங்ஹாம் மாளிகையில் அவரோடு வசிக்கவுள்ளார். இவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் சிறிது காலத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என கிளாரன்ஸ் ஹவுஸ் கடந்த மாதம் வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருந்தது.
கென்சிங்டன் அரண்மனை
இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்லேவுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 19-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர்களது திருமணம் விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் சேப்பலில் வைத்து நடைபெறும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !