பிரிகேடியர் பிரியங்க மீள நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் பிரியங்க இன்றைய தினம் இலங்கை திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் நடத்தப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது.

புலம்பெயர் தமிழ் சமூகத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்வதாக சைக மூலம் பிரிகேடியர் காண்பித்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பிரிகேடியர் பிரியந்தவின் பணியை வெளிவிவகார அமைச்சு இடைநிறுத்தியிருந்தது. எனினும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய மீளவும் அவர் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தார். இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தவறு எதனையும் இழைக்கவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் கேணல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக பிரிகேடியர் மீள அழைக்கப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !