பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.
அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...