பிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை

தெற்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ளப் பெருக்கு காரணமாக சுமார் 1600 பேர் வரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் அதிகமானவர்கள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள். இதனிடையே, விடுமுறை பாசறையில் தங்கியிருந்த சிறார்களை கண்காணிப்பதற்கான அமர்த்தப்பட்டிருந்த 70 வயதான ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கார்ட், ஆடெசே மற்றும் ட்ரோம் போன்ற பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்ட நிலையில். சுமார் 400 தீயணைப்பு படையினரும் பொலிசாரும், 4 உலங்கு வானூர்த்திகளில் வான்படையினரும் மீட்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்பாராத வெப்ப காலநிலை காரணமாக, தென் பிரான்ஸில் பெரும்பாலான பகுதிகளிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வௌ்ளம் தாக்கம் செலுத்தியுள்ளது.

வௌ்ளப் பெருக்கை அடுத்த 6 திணைக்கள அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளப் பெருக்கு காரணமாக பல கூடாரங்கள் சேதமடைந்ததுடன் 119 சிறார்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் நிலவும் உயர்ந்த வெப்ப காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டது.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பல பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் நிலவும் நீர்மட்டம் மற்றும் அதன் வேகம் என்பன தற்போது சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !