பிரான்ஸ் மண்ணில் உயிர் நீத்த போர்த்துக்கேய வீரர்களுக்கு மக்ரோன் மரியாதை!

முதலாம் உலகப் போரின் போது சுமார் நூறாண்டுகளுக்கு முன் பிரான்ஸ் மண்ணில் உயிர்நீத்த போர்த்துக்கேய வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

இருநாட்டு தலைவர்களது பங்குபற்றுதல்களுடன் வடக்கு பிரான்சிலுள்ள ரிட்ச்பர்க் கல்லறையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், ”அன்றைய இருண்ட தினத்தில் மொத்தம் 7 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும், சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளனர். மிகக் கொடூரமான முறையில் இறப்புக்களை சந்தித்த மிகப் பாரிய போராக அது அமைந்தது” எனத் தெரிவித்தார்.

1918ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போரில் 7 ஆயிரத்து 400-இற்கும் அதிகமான போர்த்துக்கேய வீரர்கள், ஜேர்மனிய துருப்புக்களால் கொல்லப்பட்டும், காயமடைந்தும், சிறைப்பிடிக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !