பிரான்ஸ் – பிரித்தானிய மீனவர்கள் இணக்கமான தீர்வை கோரி பேச்சுவார்த்தை

ஸ்கோலொப் வகை மீனினங்களை பிடிப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) லண்டனில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

பிரித்தானிய மீனுற்பத்தியாளர் அமைப்பின் பிரதிநிதிகள், அவர்களின் பிரான்ஸ் வகையறாக்களுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், டெப்ரா அமைப்பின் அதிகாரிகள் அவர்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

சுமார் 40 பிரான்ஸ் மீன்பிடி படகுகள் பிரித்தானியாவின் 5 மீன்பிடி கப்பல்களுடன் கடந்த வாரம் மோதிக் கொண்டன. வட பிரான்ஸ் பகுதியில் ஸ்கோலொப் வகை மீன்களை பிடிப்பதில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

பிரான்ஸ் மீனவர் தரப்பிலிருந்து கற்கள், புகைகுண்டுகள் மற்றும் சில பொருட்களைக் கொண்டு தம்மீது தாக்குதல் நடத்தியதாக பிரித்தானிய மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இதனிடையே, மேலும் மோதல்களை தடுக்கும் வகையில் அதில் தலையிடுவதற்கு பிரான்ஸ் கடற்படையினர் தயாராக இருப்பதாக விவசார அமைச்சர் ஸ்டீஃபன் ட்ராவட் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !