பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு சோம்ப்ஸ்-எலிசேயில் 3720 வீரர்களுடன் இராணுவ அணிவகுப்பு

இன்று ஜூலை 14, தேசிய நாளின் முதல்  நிகழ்வு, சோம்ப்ஸ் எலிசேயில் இடம்பெறும் இராணுவ அணிவகுப்பாகும். பிரெஞ்சு தேசத்தின் பெருமைகளையும், அதன் வீரத்தையும் உலகுக்கு பறை சாற்றும் விதமாக இந்த இராணுவ அணிவகுப்பு இடம்பெற்று வருகிறது. இந்த அணிவகுப்பில் மொத்தம் 3, 720 வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
மொத்தம் 211 வாகனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. இந்த எண்ணிக்கையில் 62 உந்துருளிகளும் உள்ளடங்கும். தவிர, இன்றைய குதிரைப்படை அணிவகுப்பில் 241 குதிரைகளில் வீரர்கள் அணிவகுக்கின்றனர்.
விமான சாகசங்களின் இன்று, 63 விமானங்கள் கலந்துகொண்டுள்ளன. இன்று தலைநகரில் மிக அழகிய காட்சிகளாக இவை பதிவாக உள்ளன. இவற்றில் Air Force படையைச் சேர்ந்த 49 விமானங்களும், கடற்படையைச் சேர்ந்த 6 விமானங்களும், அமெரிக்காவின் Air Force ஐச் சேர்ந்த 8 விமானங்களும் சாகசம் நிகழ்த்த உள்ளது.
29 இராணுவ உலங்கு வானூர்திகள் சாகசம் புரிய உள்ளன. இவற்றுள் தேசிய ஜோந்தாமினர்கள், பிரெஞ்சு விமானப்படையைச் சேந்த உலங்குவானூர்திகள் உள்ளடங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !