பிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி!

பிரான்ஸின் ஸ்ட்ரஸ்பேர்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ட்ரஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தையில் நேற்றிரவு நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்தனர். 12 பேர்வரை காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் இந்த தாக்குதல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்தாரி 29 வயதான செரிஃப் செகாட் ஸ்ட்ரஸ்பேர்க் நகரில் பிறந்தவர் என்றும், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.

அவர் தலைமறைவாகியுள்ளமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளதோடு, சுமார் 600 பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப்பகுதியின் பாதுகாபபும் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கையில் உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !