பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழமைக்கு மாறான வெப்பநிலை

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கோடைக்காலம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் முதல் நாளே அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனையடுத்து வெயில் நாளை சிறப்பிக்கும் முகமாக எர்பன் கடற்கரையை நோக்கி  அதிகமான மக்கள் சென்ற வண்ணமுள்ளனர்.

முதல் நாள் வெப்பநிலையானது 31 டிகிரியாக காணப்படுவதுடன், இது வழமையான சராசரி வெப்ப்நிலையை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்பட்டது.

அதிகரித்த வெப்பநிலை காரணமாக கடற்கரைகளில் தங்களின் பொழுதை களிக்கும் மக்கள் குடும்பத்தோடு அங்கு சென்று நீர் விளையாட்டுக்கள் மற்றும் படகு சவாரிகள் என்பவற்றில் கலந்துகொண்டு மகிழ்ந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பரிஸில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்கள், கல்லூர் மாணவர்கள் என அனைவரும் தங்களின் விடுமுறையினை எர்பன் கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாடி மகிழ்கின்றனர்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !