பிரான்ஸ் ஜனாதிபதிக்கு 41 வயது

இன்று டிசம்பர் 21 ஆம் திகதி, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Amiens நகரில் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி பிறந்த இவரின் முழுப்பெயர்  Emmanuel Jean-Michel Frédéric Macron
வங்கி ஒன்றில் கணக்காளராய் இருந்த இவர், 2006 ஆம் ஆண்டில் சோசலிச கட்சியின் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர், மிகச்சிறிய வயதில் 2016 ஆம் ஆண்டில் தனியே ஒரு கட்சி ஆரம்பித்தார். <<லா ரிபபுளிக் ஓ மார்சே>> (La République En Marche ) எனும் இந்த கட்சி ஆரம்பித்து அடுத்த வருடமே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவித்தார்.
 2017 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில், தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் மரீன் லூ பென்னை வீழ்த்தி ஜனாதிபதியாக தேர்வானார்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் 39 வயதில் ஜனாதிபதியாகுவது இதுவே முதன் முறை.
இன்று மக்ரோனுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதியின் பிறந்தநாள் அவரது ஆதரவாளர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !