பிரான்ஸ் கத்திக்குத்து: பொலிஸ் தலைமை அதிகாரி உயிரிழப்பு

தெற்கு பிரான்ஸ் நகரான  Rodez (Aveyron)  உள்ள நகரத்தில் வைத்து கத்திக் குத்துக்கு இலக்கான பொலிஸ் தலைமை அதிகாரி பெஸ்கல் ஃபிலோய் (Pascal Filoé)  உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரினால் நன்கு அறியப்பட்ட நபரொருவரே குறித்த பொலிஸ் அதிகாரி மீது  தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று முறை கத்திக் குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபரினால் வளர்க்கப்பட்ட நாயை குறித்த பொலிஸ் அதிகாரி எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக சந்தேகநபர் குறித்த பொலிஸ் அதிகாரியையும், நகர முதல்வரையும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் தலைமை அதிகாரி மூன்று பிள்ளைகளின் தந்தை என Rodez நகர முதல்வர் கிறிஸ்டியன் டெய்ஸ்சேட்ரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியளவில் நகர மண்டபத்தின் நுழைவாயிலை தகர்த்து சேதமேற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !