பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை

பிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த ஐந்துவார காலமாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், நேற்று (சனிக்கிழமை) தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எலோ வெஸ்ட் என்ற ஆர்ப்பாட்டக் குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அத்தோடு, மக்களாட்சியை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆர்ப்பாட்டங்களில் போது ஏற்பட்ட வன்முறைகளால் பிரான்ஸில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் சகல முயற்சிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் ஏற்கனவே மேற்கொண்டிருந்தனர்.

அந்தவகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்றும் கண்ணீர்ப்புகை மேற்கொண்டு, ஆரம்பத்திலேயே ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தினர். இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

ஏற்கனவே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் தொழிற்சங்கங்களுட்ன பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவற்றிற்கு உடன்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ச்சியாக போராடுவோம் என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அரசாங்கம் குறிப்பிட்டிருந்ததோடு, வன்முறைகளை தடுக்கும் வகையில் அதியுச்ச பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !