பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு

கிழக்கு பிரான்சில் உள்ள சுமார் 100 யூத கல்லறை சமாதிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன்- பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள கல்லறையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த உடைப்பு சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்லறைகள் உடைத்து சேதமாக்கப்பட்டது மாத்திரமன்றி, யூத-விரோத வாசகங்களும் கல்லறைகளில் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ட்ராஸ்பேர்க் நகரின் அருகில் ஒரு கிராமத்திலுள்ள ஒரு கல்லறையை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் நேற்று நேரில் பார்வையிட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கடும் கண்டம் வெளியிட்டுள்ளார். அத்துடன், யூத-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா தலைவர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பாவில் மிகப்பெரிய யூத சமூகத்தை கொண்ட நாடாக பிரான்ஸ் விளங்குகிறது. அங்கு சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் யூத மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !