Main Menu

பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு!

மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியவர்களின் இல்லங்களான EHPADகளில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பதாக சுகாதாரப் பொதுத் தலைமையகத்தின் இயக்குநர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள முதியோர் இல்லங்களில் 1600 முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகி உள்ளன. ஐந்தில் ஒரு முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளமை பெரும் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

இந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிற்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதில், கடந்த ஒருவாரத்திற்குள் மட்டும் மூன்றில் ஒரு பங்கான எட்டு முதியவர்கள் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இது தங்களிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்த அறக்கட்டளையின் இயக்குநர், மற்றவர்களிற்குத் தொற்று வராமல் பாதுகாத்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை பிரான்ஸின் முதியயோர் இல்லங்களில், 15.000இற்கும் மேற்பட்ட முதியவர்கள் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares