பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி

பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள  நீசில் (Nice), பிரான்சின் தேசிய தின வானவேடிக்கை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் மீது, ஒரு பார ஊர்திச் சாரதி நடாத்திய தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் பயங்கரவாதத் தாக்குதல் என்று உடனடியாக அறிவிக்கப்பட்ட இந்தத் தாக்குதல் பின்னர் குற்றவியல் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களை முடிந்தளவு வீடுகளில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 2h35 அளவில், இது வரை 80 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்துப் பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நீசில், தேசியதினக் கொண்டாட்ட வான வேடிக்கை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் மீது மிகவும் வேகமாக மோதிச் சென்ற இந்தப் பார ஊர்தி, இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு சனத்திரளை மோதிச் சென்றுள்ளது.
 Promenade des Anglais  பகுதியிலேயே இந்தக் கொடூரத் தாக்குதற் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் பார ஊர்திச் சாரதி கொல்லப்பட்டுள்ளார். பார ஊர்திச் சாரதியும் துப்பாக்கியால் எதிரத்தாக்கதல் தாக்குதல் நடாத்தி உள்ளார். இதில் காவற்துறையினரின் எல்லைப்பாதுகாப்புப் படையின் (police aux frontières) உயரதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை நடாத்திய வாகன சாரதி 31 வயதுடைய துனிசியா நாட்டை சேர்ந்தவன் என அறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இருந்து மேலும் காயமடைந்தவர்கள் மிகவும் அவசரமாக மீட்புப் படையினரால் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி பெரும் யுத்தகளம் போல் காட்சியளிக்கின்றது.
இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சின் மீதான, பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் உச்சமடைந்திருக்கும் நிலையில் இந்த் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !