பிரான்ஸில் மிதமான புவியதிர்வு : 30 வீடுகள் சேதம்
பிரான்ஸில் உணரப்பட்ட மிதமான புவியதிர்வு காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புவியதிர்வு 5.4 மாக்னீரியூட் ஆக பதிவாகியுள்ளது.
பிரான்ஸில் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகலில் 5.4 மாக்னீரியூட் புவியதிர்வு உணரப்பட்டது. இந்த புவியதிர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை பிரான்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
பாதிப்புகள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “பிரான்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 4 பேர் காயமடைந்தனர்.
30 வீடுகள் பாதிக்கப்படைந்துள்ளதுடன், பல வீடுகளின் சுவர்களில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கூரைகளும் பாதிப்படைந்தன.
இந்த புவியதிர்வு காரணமாக லியான், மாண்ட்பில்லியர், அவிங்னான் ஆகிய நகரங்கள் பாதிப்படைந்தன. மேலும் 300க்கும் அதிகமானவர்கள்
உள்ளக விளையாட்டு மைதானங்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளனர். மீட்புப் பணிகள் மும்முரமாக இடம்பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.
புவியதிர்வை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரான்ஸில் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, முக்கிய ஏற்பாடாக பிரான்ஸின் அணு உலைகளை செயலிழக்க செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.