பிரான்ஸில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்கத் தீர்மானம்!

உலகளாவிய ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரான்ஸ் அதன் பாதுகாப்புச் செலவீத்தை அதிகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் பிரதமர்  Edouard Philippe தெரிவித்துள்ளார்.

டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலக அரசாங்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தற்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமை எமக்குக் காணப்படுகின்றது. இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரான்ஸின் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க நாம் எண்ணியுள்ளோம்’ என்றார்.

மேலும், ‘பொருளாதாரச்சுமை, வரி ஏய்ப்பு, பயங்கரவாதம் ஆகிய அச்சுறுத்தல்களிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !