பிரான்ஸில் பட்டாசு வெடித்ததில் 9 பேர் காயம்!

பிரான்ஸில் இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று(திங்கட்கிழமை) மாலை ஸ்ரார்ஸ்பேர்க் Alsace பகுதியில் புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் வானவேடிக்கை நிகழ்வும் இடம்பெற்றன.

இந்த கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ரார்ஸ்பேர்க் நகர பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் இருவர் 15 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரார்ஸ்பேர்க் தவிர்த்து, மேலும் பல பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்தது தொடர்பான விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், அதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !