பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரான்ஸின் பொது சுதாகார மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரான்ஸில் காசநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட இரண்டு வருடங்களிலேயே இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நுரையீரலை பலமாக தாக்கும் காச நோய் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 1,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.