பிரான்ஸில் கட்டட விபத்து: நான்கு சடலங்கள் கண்டெடுப்பு

பிரான்ஸில் இரு கட்டடங்கள் சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில், நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸின் மார்செயிலே நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் சுமார் 8 பேர் காணாமல் போனதாக நகர அரச வழக்கறிஞர் சேவியர் டராபெக்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த இரு கட்டடங்கள் மிகவும் பழைமைவாய்ந்ததென தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்விபத்திற்கான காரணம் தொடர்பாக பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !