பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸ் மக்களில் பலர் நிலைமையின் ஆபத்தை உணராமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதிருப்தி கொண்டுள்ளார்.
உள்ளிருப்பு உத்தரவை மீறிப் பலர் வீதிகளிலும், கடற்கரையிலும், பூங்காவிலும் திரிவதாகவும், இது நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்துவதோடு, மேலதிகத் தொற்றையும் அதிகரிக்கும் எனவும், மக்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.