பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது!
பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி, பிரான்ஸில் கொரோனத் தடுப்பூசிகள் போட ஆரம்பித்ததில் இருந்து மொத்தமாக முப்பது மில்லியனைத் தாண்டி 30.816.508 தடுப்பூசி அளவுகள் போடப்பட்டுள்ளன.
பிரான்ஸின் பொதுமக்கள் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, நேற்றுடன் கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை, 21.5 மில்லியனைத் தாண்டி 21.555.516ஆக உள்ளது.
இதில் 9.260.992 பேரிற்கு இரண்டு அவு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.
கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை பிரான்ஸின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 5,917,397பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 108,181பேர் உயிரிழந்துள்ளனர்.