பிரான்ஸில் ஆம்புலன்ஸ் சேவை குறித்த புதிய கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு

பிரான்சில் ஆம்புலன்ஸ் சேவை குறித்த புதிய கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டன.அந்நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் நிறுவனத்தை மருத்துவமனை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நோயாளிகள் தேர்வு செய்யக் கூடாது என்றும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம்புலன்ஸ் சேவை நிறுவனங்கள், அரசுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. பாரிஸ் நகரில் சுகாதாரத்துறை தலைமையகத்தை முற்றுகையிடுவதற்காக, இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரனை ஒலித்தவாறே ஊர்வலமாக புறப்பட்டன.

போராட்டத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமையன்று, பாரிஸ் நெடுஞ்சாலையை வழிமறித்து ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அவற்றை அகற்றுமாறு வலியுறுத்திய போலீசாருடன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !