பிரான்ஸில் அவசரகால நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளத்துவது தொடர்பாக, ஒவ்வொரு நாடும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக, பிரான்சும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஆலோசனை கூட்டமொன்றினை நடத்தியது.
இதன்முடிவில், அவசரகாலச் சுகாதார நிலையை எதிர்வரும் ஜுலை 24ஆம் திகதிவரை நீடிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் எதுவார் பிலிப் கூறுகையில், ‘முதற்கட்டப் பிரகடணம், மே மாதம் 24ஆம் திகதி முடிவடைவதால், உடனடியாக சுகாதார அவசரகாலநிலையை நீக்கினால், கட்டுப்பாடுகள் தளர்ந்து, இரண்டாவது கொரோனாத் தொற்றலையை ஏற்படுத்திவிடும். அதனைக் கட்டுப்படுத்துவது கடினம்’ என கூறினார்.
அத்துடன், எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு செல்வதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...