Main Menu

பிரான்ஸின் Calais, Dunes நகரில் சட்டவிரோதமாக குடியிருந்த 89 அகதிகள் வெளியேற்றப் பட்டனர்

பிரான்ஸின் கலே மாவட்டத்தின் Dunes நகரில் சட்டவிரோதமான இடத்தில் குடியிருந்த 89 அகதிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அகதிகள் அங்குள்ள தொழிற்பேட்டைப் பகுதி ஒன்றில் இவர்கள் வசித்துள்ள வந்துள்ள நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் வெளியேற்றப்பட்டதாக அmதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அங்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸார், அகதிகளை வெளியேற்றியதுடன் அவர்கள் வசித்த கூடாரங்களையும் அகற்றியுள்ளனர். மேலும், சில சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட 20 பேர் கைதும் செய்யப்பட்டனர்.

இதேவேளை, கலே காட்டுப் பகுதியில் இருந்த அகதி முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டதாகவும் தற்போது மீண்டும் அகதிகள் பல இடங்களில் வசிக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறித்த பகுதியில் 400 வரையான அகதிகள் வசிப்பதாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.