பிரான்சு ஜனாதிபதிக்கான GSPR விஷேச பாதுகாப்பு படை வீரர்கள்..

பிரான்சின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பலத்த பாதுகாப்பின் கீழ் பதவியேற்றார். ஜனாதிபதி பதவியேற்பில் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இவ்வேளையில், நிகழ்வின் போது, 1500 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவை தவிர, புதிய ஜனாதிபதியின் பாதுகாப்பை 64 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று பாதுகாத்தது.
பிரெஞ்சு ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பினை GSPR படையினர் (le Groupement de sécurité du Président de la République) மேற்கொள்ளுகின்றனர். மொத்தமாக 64 வீரர்கள் இந்த பாதுகாப்பினை மேற்கொள்கின்றனர். நேற்றைய தினம் முதலில் பிரான்சுவா ஒலோந்து எலிசேக்கு வரும் போது 15 வீரர்களும், பின்னர் இம்மானுவல் மக்ரோனுக்கு ஏனைய வீரர்களும் பாதுகாப்பை வழங்கினார்கள். குறித்த இந்த வீரர்களே ஜனாதிபதியின் சாரதிகளாக, ஜனாதிபதியின் பயணங்கள் போது பாதுகப்பாக, மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்தையும் செய்கிறார்கள்.
GSPR படையில் எண்ணிக்கையில் பலர் இருந்தாலும், 64 பேர் மாத்திரமே ஒரு நேரத்தில் கடமையாற்றுவார்கள். ஒவ்வொரு 64 பேரும்,  வாரத்திற்கு ஒரு முறை என மாற்றி மாற்றி கடமையாற்றுவார்கள்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !