பிரான்சில் மூடப்படும் வீதியோர அங்காடிகள்
பிரான்சில் சந்தைகள் அனைத்தையும் மூடும் உத்தரவைப் பிரதமர் எதுவார் பிலிப் வழங்கி உள்ளார். உடனடியாகப் பரிசிலுள்ள திறந்த சந்தைகள் மூடப்படுகின்றன. பரிசிலுள்ள சந்தைகளை உடனடியாக மூடும் உத்தரவினைப் பரிசின் நகரபிதா அன் இதால்கோ அறிவித்துள்ளார். சந்தைகளில், ஒரு மீற்றர் பாதுகாப்பு எல்லையா னது மதிக்கப்படவில்லை என்றும், இதனால் பெருமளவான தொற்றுக்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாலும், பரிசின் சந்தைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
பிரான்சின் சந்தைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ள பிரதமர், சில சிறு கிராமங்களில், சந்தைகள் மட்டுமே உணவுப் பொருட்களை வழங்கக் கூடிய நிலை இருந்தால், மாவட்ட ஆணையரும், நகரபிதாவும் இணைந்து முடிவெடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகைளுடன் சந்தைகளைத் திறக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...