பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட 2 பொலிசார்

பிரான்சில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிசார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு பிரான்சின் Auros பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிசாருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு பொலிசார் புல்லட் புரூப் அணிந்திருந்த போதும், கை மற்றும் உடலில் குண்டு துளைத்துள்ளதாகவும், மற்றொரு பொலிசாருக்கு முழங்கையில் அடிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் விரைந்து வந்த 50-க்கும் மேற்பட்ட பொலிசார், பாதிக்கப்பட்ட இரண்டு பொலிசாரையும் மீட்டு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களுக்கு Bordeaux University மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பொலிசார், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 60 வயது மதிக்கத்தக்க நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !