பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல்..

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்சின் புறநகர்பகுதியில் ஒன்றான 95 மாவட்டத்தில் அமைந.துள்ள ஆர்ஐந்தே மாநகரத்தில் திலீபனின் நினைவாக நாட்டப்பட்ட நினைவுக் கல்லின் முன்பாக இன்று காலை 15.09.2017 10.00 மணிக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கத்துடன் தொடக்கி வைக்கப்பட்டது.

ஆர்ஐந்தே தமிழ்சங்கத்தலைவர் அவர்கள் சுடரினை ஏற்றிவைக்க தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு, மகேசு மற்றும் ஆர்ஐந்தே தமிழ்ச் சோலைப் பொறுப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் மலர் வணக்கத்தை செய்திருந்தனர், அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மக்களும் சுடர் மலர் வணக்கத்தை செய்தனர், எதிர் வரும் 26ம். திகதி வரை தொடர்ந்து காலை சுடர் ஏற்றி வணக்கம் நடைபெறவுள்ளது என்பதையும் இறுதி நாள் 26ம. திகதி காலை 10.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை அடையாள உண்ணா மறுப்பும் நடைபெறவுள்ளன.

ஒக்ரோபர் 01ம். நாள் திலீபனின் நினைவாகவும் பிரிகேடியர் சங்கர் அவர்களின் நினைவாகவும் பிற்பகல் 14.00 மணிக்கு தேசியக்கொடியேற்றல்களுடன் நினைவெழுச்சி நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !