Main Menu

பிரான்சில் காவல்துறை அதிகாரி சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி, தற்கொலை

44 வயதுடைய காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரான்சின் வடகிழக்கு எல்லையோர நகரமான Belfort இல் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சுவிஸ் எல்லையோர நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்துவந்த குறித்த வீரர், இன்று காலை அவரது வீட்டில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.

விசாரணைகளில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பதிவான ஏழாவது காவல்துறை வீரரின் தற்கொலை இதுவாகும்.

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

இறுதியாக 12 நாட்களுக்கு முன்பாக Val-de-Marne மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த CRS வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares