பிரான்சில் கனமழை 48 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

பிரான்ஸ் பரிசில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 48 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் நேற்று தொடர்ச்சியாய் பெய்த மழையினால் பிரிட்டனி மற்றும் மொரலைக்ஸ் நகரங்கள் முற்றுமுழுதாக தண்ணீரில் மூழ்கியிருந்தன.

மேலும் கடைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்தமையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வீதிகளில் தண்ணீர் தேங்கியமையினால் போக்குவரத்தும் தடைப்பட்டு மக்கள் அசௌகரிய நிலையினை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தவாரம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !