பிரான்சின் புதிய பிரதமர் Edouard Philippe – சற்று முன்னர் அறிவிப்பு

பிரான்சின் புதிய ஜனாதிபதியாக Edouard Philippe தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சற்று முன்னதாக எலிசே ஜெனரல் Alexis Kohler புதிய பிரதமராக Edouard Philippe’ஐ அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, இம்மானுவல் மக்ரோனின் பிரதமர் யார் என்ற கேள்வி தான் பரவலாக அனைத்து தரப்பிலும் பேசப்பட விடையமாகும். அதிலும், நேற்று காலை இம்மானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், தன் கடமைகளை ஆரம்பித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்று 48 மணி நேரங்களுக்குள்ளாக புதிய பிரதமரை அறிவிக்கவேண்டும். இந்நிலையில்,  திங்கட்கிழமை (இன்று) பிரதமரின் பெயரை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் இருந்து, ஊடகங்களால் பிரதமர் குறித்த விவாதங்கள், யூகங்கள் என போன்றன பரபரப்பாக பேசப்பட்டது. பிரதமராக யாரை இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார் என கேள்விகள் எழுப்பப்பட்டன. மாலை 2.30 மணிக்கு பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் எனவும், பெயரை ஜனாதிபதி மாளிகையில் ஜெனரல்  Alexis Kohler அறிவிப்பார் எனவும் சற்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது  Edouard Philippe பிரதமராக அறிவித்துள்ளார். தொடர்ந்து இம்மானுவல் மக்ரோன் ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு பயணமாகிறார். இவர் தான் பிரதமராக வருவார் என ஊடகங்களால் எதிர்வு கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !