பிரான்சின் பிரபல பாடகர் ஜொனி ஹொலிடே 74வது வயதில் புற்றுநோயால் காலமானார்

ராப் மற்றும் பாப் இசை பாடகரும், நடிகருமான ஜொனி ஹொலிடே புற்றுநோயால் மரணமடைந்து விட்டதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் பிரபல பாடகராகவும். நடிகராகவும் வலம் வந்தவர் ஜொனி ஹொலிடே (74). இவர் கடந்த 1950-களில் பாடிய ஒரு பிரஞ்ச் ஆல்பம் நூறு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்தது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜொனி ஹொலிடே அதற்காக சிகிச்சை மேற்க்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜொனி ஹொலிடே, நோய் பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக அவரின் மனைவி லைடிசியா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜொனி ஹொலிடே நம்மை பிரிந்து சென்றுவிட்டார். இதை நம்பமுடியாத நிலையில் தான் உங்களிடம் கூறுகிறேன். ஆனால் இது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

ஜொனி ஹொலிடே ஐந்து முறை திருமணமானவர் என்பதும், ஒரே பெண்ணை இரு முறை திருமணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !