Main Menu

பிரான்சின் தென் மேற்கு பாலம் உடைந்து விழுந்து ஒருவர் பலி

பிரான்சின் தென் மேற்கு நகரான Mirepoix-sur-Tarn நகரில் மேம்பாலம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.  இன்று காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மேம்பாலம் Haut-Garonne மாவட்டத்தின்  Mirepoix-sur-Tarn நகரில் உள்ளது.
இந்த மேம்பாலம் ஆற்றின் நீர் மட்டத்தில் இருந்து 150m உயரத்தில் உள்ளது . பாரவூர்தி ஒன்றின் அதிக பாரம் காரணமாக
மேம்பாலம் முறிந்து விழுந்துள்ளது. இப்பாரவூர்தியின் பின்னால் பயணித்த மகிழுந்து ஒன்றும் ஆற்றில் விழுந்துள்ளது.

15 வயதுடைய மகனுடன் அவரது தாயார் மகிழுந்து ஒன்றில் பயணித்துள்ளார். அதன் போது விபத்து ஏற்பட்டு மகிழுந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.  மகிழுந்துக்குள் இருந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.