Main Menu

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி” கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “குடு தேவி ”என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பேலியகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடை பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ ” என்பவரின் உதவியாளர் ஒருவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிரவும்...
0Shares