பிரபல கனேடிய புவியியலாளர் காலமானார்!

கனடாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் புவியியலாளருமான க்ளே ரிடில் காலமானார்.

Calgary Flames என்ற ஹொக்கி விளையாட்டுக்குரிய நிறுவனத்தின் உரிமையாளரும் எண்ணெய் வர்த்தகத்தில் ஜாம்பவானாகவும் விளங்கிய க்ளே ரிடில் தனது 81ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Paramount Resources நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கிய க்ளே ரிடில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது தலைமை பதவியை மகள் ஜிம் ரிடிலிடம் ஒப்படைத்துள்ளார்.

அவருடைய மகள் சுசன் றிடில் றேராஸ்ஸீம் தந்தையைப் போல் எண்ணெய் வர்த்தகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றவராவார். அவர் தன் சொந்த உழைப்பில் Perpetual Energy என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்திவருகிறார்.

க்ளே ரிடிலின் மறைவையிட்டு, அவருடைய உற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சொத்துக் கணக்கெடுப்பின்படி 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்தைக் கொண்டிருந்த ரிடில், 2018ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்று தனி வருமானத்தில் வீழ்ச்சியை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !