பிரபல இசைக்கலைஞர் மீது நான்கு பெண்கள் பாலியல் பலாத்கார புகார்!

சுவிஸின் பிரபல இசைக்கலைஞர் மீது நான்கு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லுசர்நே நகரை சேர்ந்த 81 வயதுடைய சார்லஸ் டுடோய்ட் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர் ஆவார். இவர் பல இசைக் குழு கச்சேரிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இசைக்குழுக்களை சேர்ந்த 1 பெண் உட்டபட 3 பாடகிகள் “தங்களை இசையமைப்பாளர் சார்ளஸ் 1985 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரையிலான காலத்தில் அமெரிக்காவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக” குற்றம்சாட்டி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து முக்கிய இசைக்குழுக்களான சான் பிரான்சிஸ்கோ மற்றும் பாஸ்டன் சிம்பொனி இசைக்குழுக்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள இசையமைப்பாளர் சார்லர்சை தங்கள் குழுவிலிருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக இசை குழுவை சார்ந்தவர்கள் தெரிவிக்கையில்:- இந்த குற்றச்சாட்டில் தீவிரமான தன்மை உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !