பிரபலத்தின் கணவரை பாராட்டியுள்ள நடிகை சமந்தா!

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி அண்மையில் அளித்துள்ள செவ்வி ஒன்றில் மீடூ இயக்கத்தை குறை கூறி இருந்தார்.

அதில் “நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீ டூவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது குப்பை” எனப் பேசியிருந்தார்.

இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தர், தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை பதிவிட்டார்.

அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டியதோடு பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் எனக்கூறி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை சமந்தா, ராகுலின் டுவிட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !